Monday, February 19, 2007

Dreaming on a Toilet Seat

This a tamil poem I wrote yesterday while I was sitting on the banks of Bercha. The thoughts were so spontaneous and I just couldnt resist penning it down. I must thank my friend CVR for waking up the poet in me!!

நான் தேடிய சீதை

பக்கத்தில் அவள் இருந்தாள்.
கடிகாரத்தின் முள் மின் விசிறியானது.
பக்கத்தில் அவள் அமர்ந்தாள்
முள் படுக்கை பூவானது.

இதழ் துடைத்து அவள் மறந்த
கைக்குட்டை என் பஞ்சணை ஆனது.


சீவிப் படர்ந்த அவள் கூந்தல்
என் இரவானது.
சீப்பினில் சிக்கும் ஒவ்வொரு முடியும்
என் இதயத்தை கோர்க்கும் நூலானது.

எனைப் பார்த்து இமைக்கும்
அவள் புன்னகை என் விடியலானது

நான் தேடிய சீதை!!

மா பலா வாழை
அவள் சொற்கள் கவிச்சோலை.
அதிகாலைப் பனி, வென் துளிர் மேகம்
நெஞ்சமெல்லாம் அவள் மோகம்.

மரம் அவள், செடி அவள்
கொடி அவள், இலை அவள்,
மலை அவள், மலைச்சாரல் அவள்,
பாறை நடு அசையும் இளம் புல் அவள்.

நாற்றவள், கீற்றவள்,
செழிக்கும் நெல் அவள், உண்ணும் உணவவள்
உவற்க்கும் உப்பவள், இனிக்கும் தேனவள்.
நீறும் அவள், நெறுப்பும் அவள்

இசை அவள், லயம் அவள்,
ராகம் அவள், தாளம் அவள்,
வீணையும் அவள், மீட்டும் விரலும் அவள்.


அமுதம் அவள், நஞ்சும் அவள்,
பாற்கடலும் அவள், அதை கடக்கும் படகும் அவள்.
அலையும் அவள், அதில் மிதக்கும் நுறையும் அவள்,
குமுதம் அவள், கலங்கரை விளக்கம் அவள்.

கட்டிலும் அவள், மெத்தையும் அவள்,
இன்பமும் அவள், ஊடலும் அவள்.
விழியில் அவள், செவியில் அவள்,
தொட்டால் அவள், உணர்ந்தால் அவள்.

கண் விழித்து பார்த்தேன்
கனவா இது? பகற்கனவா இது?

எங்கே அவள்? எங்கே அவள்?
நான் தேடீய சீதை!!


நிலவினில் தேடினேன், விண்வெளியில் கூவினேன்
காற்றினை தூதனுப்பினேன்.
பூஞ்சோலையை கேட்டேன்,
பட்டாம்பூச்சியிடம் சொல்லிவைத்தேன்.
கறுப்புக் கண்ணாடியனிந்து சூரியனிலும் தேடினேன்.


இம்மன்னில் அவள் இல்லையென்று
மதிகெட்டு நம்பினேன்.

தக், தக், தக்.

கொஞ்சம் இருங்கள், கதவு தட்டும் ஓசை
திறந்தேன், மனக்கதவைத் திறந்தேன்.
எதிரெ அவள், எதிரெ அவள்.

வியந்தேன் நான்
நீயா அவள்? நீயா அவள்?

புன்னகைத்தாள். எனது இரவு விடிந்தது.
கண்ணிமைத்தாள். ஒரு யுகம் கணமானது.

ஆனந்தத்தில் பாடினேன்
இவளே அவள்! இவளே அவள்!

இத்தனை நாள் எங்கிருந்தாயென
பொய் கோபம் காட்டினேன்.

கோவில் மனியோசை போல் சிரித்தாள்.
பதில் அளித்தாள்...

உன்னருகே இருந்தேன், உன்னில் இருந்தேன்
உன் இமைக்குள் இருந்தேன்.

கண் திறந்து தேடினாய்
அதனால் எனை காணவில்லை.

இன்று மனம் திறந்து நோக்கினாய்
நொடியில் எனை கண்டாய்.

நீ தேடிய சீதை!!



For all those who cannot view the tamil fonts, here is the JPEG image of the poem. I hope this solves the problem for firefox users.



3 comments:

Smart Gemini said...

military....not bad man, nalla thaan kavithai ezhuthare.....

ezhutindey iruthen na un sethai ya kottai vida pore, poi theda aarami :P

Raman said...

Pramaadam!!!

The Soul Doctor said...

@ Raman

thanks:)

karthik